Editorial / 2019 ஜனவரி 21 , மு.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சோமாலியாவிலுள்ள அல்-ஷபாப் ஆயுததாரிகளை இலக்குவைத்து, ஐக்கிய அமெரிக்கப் படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலொன்றில், 52 ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என, ஐ.அமெரிக்க விமானப் படை தெரிவித்தது. நேற்று முன்தினம் (20) மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல், சோமாலிய விமானத் தளமொன்றின் மீது அத்தினமே மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக அமைந்திருந்தது.
தலைநகர் மொகடிஷுவிலிருந்து தென்மேற்காக 370 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஜிலிப் என்ற இடத்துக்கு அருகிலுள்ள இராணுவத் தளத்தையே, அல்-ஷபாப் ஆயுததாரிகள் இலக்குவைத்திருந்தனர். தற்கொலைக் கார்க் குண்டுத் தாக்குதலாக இது அமைந்திருந்தது. இதைத் தொடர்ந்தே, பதிலடி நடத்தப்பட்டிருந்தது.
தாக்குதல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஐ.அமெரிக்கத் தரப்பு, தமது தாக்குதலின் விளைவாக, பொதுமக்களுக்கு எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை என நம்புவதாகத் தெரிவித்தது.
சோமாலியாவில் கணிசமானளவு பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அல்-ஷபாப், 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் இழப்புகளைச் சந்தித்து, பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆனால், அக்குழுவின் செயற்பாடுகள் இன்னமும் தொடர்கின்றன.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025