2025 மே 19, திங்கட்கிழமை

ஜனாதிபதிக்கு எதிராக விவசாயிகள் உழவு இயந்திரத்தில் பேரணி

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்ஜெண்டினாவில்  அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராகத் திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள், தலை நகர் பியூனஸ் அயர்ஸில் ( Buenos Aires ) உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மாபெரும் உழவு  இயந்திரப்  பேரணியொன்றை முன்னெடுத்து வருகின்றனர். 

நாட்டில் பண வீக்கத்தை கட்டுப்படுத்த விவசாய பொருட்களின் விலை நிர்ணயங்களில் தலையீடும் அந்நாட்டு ஜனாதிபதி அல்பெர்டோ பெர்னாண்டஸ்சின்  செயற்பாடுகள் விவசாயத்துறைக்கு எதிரானவை எனத்  தெரிவித்து விவசாயிகள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

 அத்ததுடன் வரி விதிப்பு குறித்த அல்பெர்டோ பெர்னாண்டஸ்சின் முடிவை திரும்பப் பெறக்கோரியும் ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X