Editorial / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேனின் ஜனாதிபதித் தேர்தலில், எவ்வித அரசியல் அனுபவுமில்லாத நகைச்சுவை நடிகரான வொலடீமர் ஸிலென்ஸ்கி பாரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.
ஏறத்தாழ முழுமையானதான நேற்று (22) அதிகாலை வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ முடிவுகளின்படி, உக்ரேனின் தற்போதையை ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோவை 73.2 சதவீத வாக்குகளைப் பெற்று, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஜனாதிபதிபதியாகத் தோன்றியதை மட்டுமே முன்னர் அரசியல் பதவியொன்றாகக் கொண்டிருந்த வொலடீமர் ஸிலென்ஸ்கி தோற்கடித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலின் 85 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோ 24.4 சதவீதமான வாக்குகளை மாத்திரமே பெற்று வொலடீமர் ஸிலென்ஸ்கியிடம் தோல்வியடைந்துள்ளார்.
அந்தவகையில், நகைச்சுவையொன்றாக ஆரம்பித்த வொலடீமர் ஸிலென்ஸ்கியின் பிரசாரமானது, சமூக நீதி மறுப்பு, மோசடி, ரஷ்ய ஆதரவுடனான பிரிவினைவாதிகளுடனான கிழக்கு உக்ரேனில் யுத்தம் ஆகியவற்றால் எழுச்சியடைந்திருந்தது.
இந்நிலையில், தான் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டேன் என தனது பிரசாரத் தலைமையகத்திலிருந்த ஆர்ப்பரித்த ஆதரவாளர்களிடம் வொலடீமர் ஸிலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுதவிர, மக்களின் பணியாளன் தொலைக்காட்சித் தொடரின் நாயகனான வொலடீமர் ஸிலென்ஸ்கி, தங்களைப் பாருங்கள், அனைத்தும் சாத்தியம் என சோவியத் ஒன்றியத்துக்கு பிறகான அனைத்து நாடுகளுக்கும் கூறுவதாக வொலடீமர் ஸிலென்ஸ்கி மேலும் கூறியுள்ளார்.
அந்தவகையில், குறித்த கருத்தானது அயல்நாடான ரஷ்யாவை இலக்கு வைத்ததாகக் காணப்படுகின்றது. அங்கு, 20 ஆண்டுகளாக பதவியில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இருக்கின்ற நிலையில், பலரும் முக்கியமான ஆர்வத்துடன் உக்ரேன் ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில், தான் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோ, தான் அரசியலிருந்து விலகமாட்டேன் என்பதை உறுதியாகக் கூறுவதாக, தனது பிரசார தலைமையத்த்தில் நடாத்திய உரையில் தெரிவித்துள்ளார்.
12 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago