Editorial / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது பதவிக்காலம் இம்மாதம் 28ஆம் திகதி முடிவடைவதற்கு முன்னர், அல்ஜீரிய ஜனாதிபதி அப்துல்அஸூஸ் புதுபீகா தனது ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என அல்ஜீரிய அரச ஊடகமான ஏ.பி.எஸ் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தனது 20 ஆண்டு ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர எதிர்பார்த்த வாரக் கணக்கான பாரிய ஆர்ப்பாட்டங்கள், இராணுவ அழுத்தத்துக்கு தலைவணங்கி, தனது ஜனாதிபதிப் பதவிலிருந்து ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகா இராஜினாமா செய்யவுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த அறிவிப்பு குறித்து உடனடியாக எந்தப் பதிலளிப்புகளும் ஆர்ப்பாட்டக்காரர்களிடத்தில் காணப்பட்டிருக்கவில்லை. பிரதான எண்ணெய் ஏற்றுமதி நாடொன்றான அல்ஜீரியாவை இவ்வாண்டு பெப்ரவரி 22ஆம் திகதி முதல் முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலோனோர், ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகாவை புதிய தலைமுறைத் தலைவர்கள் பிரதியீடு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
அந்தவகையில், மேலதிக மாற்றங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்துகின்ற சமிஞ்ஞையொன்றாக, பிரதமர் ஆளும் வட்டங்களுக்கு மிக நெருக்கமானவர் எனத் தெரிவித்து ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகாவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்ட தற்காலிக அமைச்சரவையை பல எதிர்க்கட்சிகள் நிராகரித்திருந்தன.
இந்நிலையில், அரச நிறுவனங்களின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகா, ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர் முக்கியமான முடிவுகளை எடுப்பார் எனத் தெரிவித்துள்ள ஏ.பி.எஸ், ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகா எப்போது பதவி விலகுவார் என்ரோ அல்லது மேலதிக தகவல்கள் எதையும் உடனடியாக வழங்கியிருக்கவில்லை.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago