Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 ஜூலை 21 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானில் நடந்த மேலவை (செனட் சபை) தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சியும், கோமெயிட்டோ கூட்டணியும் ஆட்சியமைத்து வருகிறது. இந்த நிலையில், பாராளுமன்றத்தில் மேல்சபைக்கு ஞாயிற்றுக்கிழமை ( 20) அன்று தேர்தல் நடைபெற்றுள்ளது.
மேலவையின் 248 இடங்களில் பாதி இடங்களுக்கான தேர்தல் நடந்தது. ஆளும் கட்சிகளுக்கு மேலவையில் ஏற்கனவே 75 இடங்கள் உள்ள நிலையில், இன்னும் 50 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்ற வேண்டும்.
இந்த நிலையில், மேலவை தேர்தலில் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கீழவை தேர்தலிலும் பெரும்பான்னமையை இழந்துள்ளது.
இதன்மூலம், 70 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக லிபரல் டெமாக்ரடிக் கட்சி எந்த அவைகளிலும் பெரும்பான்மையை பெறவில்லை.
இருப்பினும், இஷிபா தனது பதவியில் தொடர விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால், புதிய பிரதமர் தெரிவு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
ஏற்கெனவே விலைவாசி உயர்வு மற்றும் அமெரிக்காவின் வரிகள் போன்றவை பிரதமர் இஷிபாவுக்கு எதிர்வினையாற்றி இருப்பதாக குறிப்பிடத்தக்கது.
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago