Freelancer / 2025 ஒக்டோபர் 09 , மு.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பெண் மேயர் கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜேர்மனியில் உள்ள ரூர் பிராந்தியத்தில் ஹெர்டெக்கே நகரில் புதிய மேயராக ஐரிஸ் ஸ்டால்ஸர் என்பவர் தேர்தெடுக்கப்பட்டார்.
இவர் மேயராக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடலின் பல இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இவர் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த சில நாள்களில் பதவியேற்கவிருந்த நிலையில், அவர் மீது மர்மநபர்கள் கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். (a)

8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025