Freelancer / 2026 மார்ச் 03 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக மூடப்பட்டிருந்த டுபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில் நேற்று (02) மாலை முதல் குறைந்த அளவிலான விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
விமானச் சேவைகள் தொடங்கப்பட்டாலும், பயணிகள் தங்களது விமான நிறுவனத்திடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட பயண நேரத் தகவல் வராமல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மாலை முதல் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை இயக்க உள்ளதாகவும், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட பயணத் தேதிகள் குறித்த தகவல்கள் பயணிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. (a)
23 minute ago
36 minute ago
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
36 minute ago
51 minute ago
3 hours ago