Freelancer / 2024 ஒக்டோபர் 27 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள டிராமி புயலால், 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தப் புயல் அங்குள்ள பல மாகாணங்களை புரட்டிப் போட்டது. முன்னெப்போதும் இல்லாத இந்த காலநிலை அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் ஒரு பெரிய வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் திட்டமிட்டுள்ளது.
இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 160 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் பல மாகாணங்களில் கனமழை கொட்டியது. பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பல வீடுகள், கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
கனமழையை தொடர்ந்து படங்காஸ் மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன. தகவலறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
இந்நிலையில், டிராமி புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் பலியானோரின் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது. மேலும் 40க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
நிலச்சரிவில் காணாமல் போனோரை தேடும் பணியில் பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் அவசரகால முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago