Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிபியாவை தாக்கிய டேனியல் புயல் மற்றும் மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 30,000இற்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளனர்.
மேலும் 20,000இற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் தீவிரமடைந்து வருவதோடு உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
மத்தியதரைக்கடல் பகுதியில் உருவான டேனியல் என்று பெயரிடப்பட்ட புயல் கடந்த 10ஆம் திகதி லிபியாவின் பெங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் வரலாறு காணாத பலத்த மழை பெய்துவந்த நிலையில் கிழக்கு லிபியாவின் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நதியில் கட்டப்பட்டுள்ள 2 அணைகள் உடைப்பெடுத்தன. இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இதுகுறித்து கிழக்கு லிபியா நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவிக்கையில்,
“புயல், கடும் மழை மற்றும் அணைகள் உடைப்பெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 6000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 30,000இற்கும் மேற்பட்டோரை காணவில்லை’’ என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் லிபியாவில் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago