Freelancer / 2025 ஜூலை 09 , பி.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார் என்பதை வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய சமீபத்திய கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
முன்னதாக, இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி விதித்திருந்த வரி 44% ஆகும்.
இலங்கையைத் தவிர, அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கும் 30% வரி விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், புருனே மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் 25% வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் 20% வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக மேலும் ஏழு நாடுகளுக்கு புதிய கடிதங்களை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (09) அறிவித்தார். R
8 minute ago
25 minute ago
34 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago
34 minute ago
34 minute ago