Editorial / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான, வியட்நாம் தலைநகர் ஹனோயில், எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து மறுநாள் வரை இடம்பெறவுள்ள தனது இரண்டாவது சந்திப்பில் கலந்துகொள்வதற்காக, வட கொரிய சிரேஷ்ட அதிகாரிகளுடன், வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன், வட கொரியத் தலைநகர் பியொங்யங்கிலிருந்து நேற்று முன்தினம் பிற்பகல் ரயிலில் புறப்பட்டார் என, வடகொரியாவின் உத்தியோகபூர்வ கே.சி.என்.ஏ செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
வியட்நாம் வரைக்கும், தலைவர் கிம் ரயிலிலேயே செல்வராயின், சீனாவூடாக ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்கள் பயணிப்பதற்கு குறைந்தது இரண்டரை நாள்களாவது எடுக்கும். சீனாவூடான தலைவர் கிம்மின் பயணம் தொடர்பான எந்தவிதத் தகவல்களையும் சீனா வழங்கவில்லை என்பதோடு, ஹனோயைச் சென்றடையை முன்னர், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை, தலைவர் கிம் சந்திப்பாரா என்ற கேள்விக்கு, சீனாவின் வெளிநாட்டமைச்சு உடனடியாகப் பதிலளித்திருக்கவில்லை.
சீன எல்லையிலுள்ள ரயில் நிலையமொன்றிலிருந்து ஹனோய்க்குச் செல்வதற்காக தலைவர் கிம் தெரிவுசெய்வார் என எதிர்பார்க்கப்படும் வீதியின் போக்குவரத்தை நாளை வியட்நாம் தடையசெய்யவுள்ளது.
அந்தவகையில், ஜனாதிபதி ட்ரம்புடனான தமது தலைவர் கிம்மின் சந்திப்பை முதற்தடவையாக வடகொரியா நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. தலைவர் கிம்முடன், சிங்கப்பூரில் கடந்தாண்டு இடம்பெற்ற ஜனாதிபதி ட்ரம்புடனான அவரது சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய அமெரிக்காவுக்கான வட கொரியாவின் தூதுவர் கிம் யொங் சோல், வட கொரிய தொழிலாளர் கட்சி மத்தியகுழுவின் உப தலைவர் றி சூ யொங், வெளிநாட்டமைச்சர் றி யொங் ஹோ ஆகியோர் செல்கின்றனர். இதுதவிர, சிங்கப்பூரில் தலைவர் கிம்முக்கு உதவிய அவரது சகோதரியும் அவருடன் செல்கின்றார்.
12 minute ago
8 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
8 hours ago
05 Nov 2025