2025 மே 01, வியாழக்கிழமை

தங்கப் பாத்திரத்தில் சமையல் செய்த பெண்

Freelancer   / 2025 மார்ச் 03 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனப் பெண் ஒருவர், தங்கப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடும் வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

குறித்த இளம்பெண் 2 தங்க நகைக் கடைகளை நடத்தி வருகிறார். அவர் தனது நண்பரின் பட்டறையில் 1 கிலோ தங்கத்தில், தங்கப் பாத்திரத்தை செய்யச் சொல்லி வாங்கினார்.

அதில் தனக்குப் பிடித்தமான உணவை சமைத்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் "இந்த தங்கப்பாத்திரம் விற்பனைக்குத்தான் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதனால் வாடிக்கையாளர்களிடம் அனுமதி கேட்டுத்தான் அதில் சமைத்து சாப்பிட்டு காட்சிப்படுத்தி உள்ளேன். தங்கம் அதன் சிறந்த கடத்து திறனால், உணவை சீக்கிரம் சமைக்க உதவுகிறது. ஆனால் உணவின் சுவையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை" என்று கூறியுள்ளார்.

விற்பனைக்கு வந்துள்ள அந்த தங்கப்பாத்திரத்தின் விலை இலங்கை மதிப்பில் ரூ.252 இலட்சம். அந்த வீடியோவை பல இலட்சம் பேர் இரசித்து உள்ளனர். பலரும் கலவையான கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .