Freelancer / 2025 மே 20 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேசியா - மேற்கு பப்புவா மாகாணம் ஏர்பாக் மலைப்பகுதி அருகே,தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில், 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
சட்டவிரோதமாக குறித்த தங்க சுரங்கம் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சுரங்கத்தில் உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தனர்.
இந்தநிலையில், திங்கட்கிழமை (19), வடக்கு பப்புவாவில் பெய்த அடைமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் சட்டவிரோத தங்க சுரங்கத்துக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. தொழிலாளர்கள் பலர் தங்கம் வெட்டி எடுத்து கொண்டிருந்த சமயத்தில் அந்த சுரங்கம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 20க்கும் மேற்பட்டோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. சுரங்கத்தில் தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
27 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago