Freelancer / 2025 மார்ச் 24 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் சிந்த் மாவட்டத்தில், கடந்த 2 மாதங்களில் தட்டம்மை பாதிப்புக்குள்ளாகி, 17 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில, கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை, தட்டம்மை பாதிப்பு பற்றி சிந்த் சுகாதார துறை கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.
இதில், 1,100க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளானது தெரியவந்தது. இதில், அதிக அளவாக காயிர்பூர் மாவட்டத்தில் 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கராச்சியில், கடந்த 2 மாதங்களில் மொத்தம் 550 சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கராச்சியின் கிழக்கு மாவட்டத்தில் 5 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சுக்கூர் மற்றும் ஜகோபாபாத் மாவட்டங்களில் தலா ஒரு சிறுவர்கள் என பாகிஸ்தானில் 17 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதுபற்றி வைத்தியர்கள் கூறும்போது,
“ பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி போடாமல் இருப்பது ஆகியவை சிறுவர்களின் மரணங்களுக்கான முக்கிய காரணங்கள் ஆகும்,” என கூறினர்.
32 minute ago
39 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
3 hours ago
05 Nov 2025