2026 பெப்ரவரி 06, வெள்ளிக்கிழமை

தினசரி நாளிதழ் ‘வொஷிங்டன் போஸ்ட்’ : 300 ஊழியர்கள் நீக்கம்

Editorial   / 2026 பெப்ரவரி 06 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

அமெரிக்​கா​வில் ‘நியூ​யோர்க் டைம்​ஸ்’, ‘தி வால் ஸ்ட்ரீட் ஜேர்​னல்’, ஆகிய​வற்​றுக்கு அடுத்​த​படி​யாக அதி​கம் விற்பனை​யாகும் 3-வது பெரிய தினசரி நாளிதழ் ‘வொஷிங்​டன் போஸ்ட்’.

  1877-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​ட இதன் உரிமை பலரிடம் கை மாறி​யுள்​ளது. இறு​தி​யாக கடந்த 2013ம் ஆண்​டில் இந்த பத்திரி​கையை அமே​சான் நிறு​வனர் ஜெப் பெசோஸ் 250 மில்லியன் டொலருக்கு வாங்​கி​னார். இந்த நாளிதழின் விற்​பனை கடந்​தாண்​டில் 1 லட்​சம் பிர​தி​களுக்கு கீழ் குறைந்​தது. கடந்த 55 ஆண்​டு​களில் முதல் முறை​யாக இதன் விற்​பனை 1 லட்​சம் பிரதிகளுக்கு கீழ் குறைந்​தது.

இந்​நிறு​வனத்​தில் 800-க்​கும் மேற்​பட்ட பத்​திரி​கை​யாளர்​கள் பணியாற்​றினர். நிதி நெருக்​கடி காரண​மாக இவர்​களில் 300-க்கும் மேற்​பட்​டோரை வாஷிங்​டன் போஸ்ட் பணி நீக்​கம் செய்துள்ளது. விளை​யாட்டு செய்தி பிரிவு, வெளி​நாட்டு நிருபர்​கள் பணி​யில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் காங்​கிரஸ் எம்​.பி சசி தரூரின் மகன் இஷான் தரூரும் ஒரு​வர். இவர் சர்​வ​தேச விவ​காரங்​கள் குறித்த செய்​தி​களை எழு​தி வந்​தார்.

பணி​யில் இருந்து நீக்​கப்​பட்​டது குறித்து எக்ஸ் தளத்​தில் இஷான் தரூர் கூறுகை​யில், ”வொஷிங்​டன் போஸ்ட் பத்​திரிக்​கையி​ல் இருந்து நான் நீக்​கப்​பட்​டுள்​ளேன். என்​னுடன் பணி​யாற்​றிய சர்வதேச நிருபர்​கள் பலரும் நீக்​கப்​பட்​டுள்​ளனர். நிறு​வனத்​தின் நடவடிக்​கை​யால் மனம் உடைந்துவிட்டேன்.

சுமார் 12 ஆண்​டு​கள் மிகச் சிறந்த நபர்​களு​டன் பணி​யாற்​றியதை கவுர​வ​மாகக் கருதுகிறேன். வேல்ட் வியூ என்ற பகு​தியை வொஷிங்டன் போஸ்ட் பத்​திரிக்​கை​யில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கி சர்​வ​தேச விவ​காரங்​கள் குறித்த செய்​தியை எழு​தி வந்தேன். இதை பல ஆண்​டு​களாக விரும்பி படித்த வாசகர்களுக்கு நன்​றி” என குறிப்​பிட்​டுள்​ளார்​.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X