Ilango Bharathy / 2022 பெப்ரவரி 02 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் பாடசாலையொன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் நேற்றைய தினம் (01) இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா, விர்ஜினியா மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவரும் ஒரு தனியார் பாடசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று குறித்த பாடசாலை வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர், திடீரென தாக்குதலில் ஈடுபட்டதாகவும்,இதில் அப் பாடசாலை மாணவர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூடுக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 minute ago
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
3 hours ago