Editorial / 2019 ஏப்ரல் 12 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் தமிழ்நாட்டில், நாடாளுமன்ற கீழ்ச்சபைத் தேர்தலில் வாக்களிக்க 59,900,000 வாக்காளர்கள் தகுதி பெற்றிருப்பதாகவும், 7,780 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டடுள்ளதாகவும் தமிழ்நாட்டின் தலைந்த் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை நேற்று (11) சத்யபிரத சாகு சந்தித்தபோதே மேற்படி கருத்தை வெளிப்படுத்தினார். அந்தவகையில், அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்த தேர்தலில் 150,302 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 94,653 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. பெண்களுக்கான தனி வாக்குச்சாவடி மையம், தொகுதிக்கு ஒன்று அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 67,720 வாக்குச்சாவடி மையங்களில் 7,780 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள பிற 13 ஆவணங்களைக் காட்டியும் வாக்களிக்கலாம். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் முதல்முறையாக வாக்களிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அங்கு சிகிச்சை பெற்று வரும் 900 பேரில் வாக்களிக்கும் தகுதியுடைய 192 பேரை மருத்துவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 1,276,600,000 இந்திய ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 620,000,000 இந்திய ரூபாய்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. 2,840,000,000 இந்திய ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 4,185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்
12 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago