Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 02 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் ஒரு நாளைக்கு சுமார் 23 மணி நேரம் வரை கட்டிலிலேயே இளம்பெண்ணொருவர் கழித்து வருவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பிரித்தானியாவில் பாங்கோர் (Bangor) என்னும் பகுதியைச் சேர்ந்தவர் Lyndsi Johnson. 28 வயதான இவர் Postural Tachycardia என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக அவர் உட்காரும் போதோ அல்லது நிற்கும் போதோ கால் கீழே படும் சமயத்தில், அவரது இதய துடிப்பு அசாதாரண நிலைக்கு செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர் "எனக்கு புவி ஈர்ப்பு என்றால் ஒருவித ஒவ்வாமை இருக்கிறது. இது கேட்பதற்கு சற்று வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் அது தான் உண்மை. என்னால் மூன்று நிமிடத்திற்கு மேல் எழுந்து நிற்க முடியாது. அப்படி நின்றால் மயக்கமோ அல்லது உடல்நிலை சரி இல்லாமலோ ஆகி விடும். கடந்த 2015 ஆம் ஆண்டே எனக்கு இவ்வாறான நோய் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து 2018 ஆம் ஆண்டளவில் எனது நிலை மேலும் கவலைக்கிடமானது. தற்போது நான் படுத்து கிடக்கும் போது மட்டும் தான் மிகவும் நன்றாக உணர்கிறேன். இதனால் நாள் முழுவதும், அதாவது 23 மணி நேரம் வரை நான் படுக்கையில் தான் இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
மேலும் கால் மேல் கால் போட்டு இருந்த நிலையில் தான், உணவு அருந்தவும் குளிக்கவும் என்னால் முடிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
14 minute ago
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
38 minute ago