Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா மீது ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டின் பீரங்கியில் இருந்து வந்த குண்டுகள் எகிப்து நாட்டில் தாக்கியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில் திடீரென ஏவுகணை எகிப்தைத் தாக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாக நடக்கிறது. இந்த சண்டையில் சூயஸ் கால்வாய் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால் அது சர்வதேச அளவில் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் எகிப்து மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பரபரப்பைக் கிளப்பியது.
இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கெரெம் ஷாலோம் பகுதியில் எல்லையை ஒட்டிய எகிப்திய போஸ்ட் மீது பீரங்கி ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வருத்தம் தெரிவிக்கிறது என பதிவிட்டுள்ளது.
16 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago