2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருடப்பட்ட குறிப்பேடுகள் மீண்டும் நூலகத்தில் வைக்கப்பட்டதால் பரபரப்பு

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 06 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் 20 ஆண்டுகளுக்கு முன்னர்  திருடப்பட்ட சார்லஸ் டார்வினின்(Charles Darwin) 2 குறிப்பேடுகள், மீண்டும் திருடு போன நூலகத்திலேயே விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனித குல பரிணாம வளர்ச்சி குறித்து அறிஞர் சார்லஸ் டார்வின் 185 ஆண்டுகளுக்கு முன்னர் தனது   கைப்பட எழுதிய 2 ஆய்வுக்குறிப்பேடுகள் பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

எனினும் கடந்த 2000ஆம் ஆண்டு புகைப்படம் எடுப்பதற்காக பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து அவை எடுக்கப்பட்ட போது மர்ம நபர்களால் அக் குறிப்பேடு திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் மர்ம நபர் ஒருவர், ஈஸ்டர் வாழ்த்துச்செய்தியுடன் அந்த இரு குறிப்பேடுகளையும் பரிசுப் பெட்டியில் வைத்து நூலகத்தில் விட்டுச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X