Editorial / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் (தி.மு.க) காங்கிரஸுக்குமிடையிலான கூட்டணியில், புதுச்சேரி தொகுதியுடன் சேர்த்து 10 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேற்றுத் தெரிவித்தார்.
இவ்வாண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சிகளின் தலைமையின் கீழ் கூட்டணி அமைகிறது. இத்தேர்தலில், அதிகமான தொகுதிகளில் நிற்கு தி.மு.க. முடிவெடுத்தது. இதனால் காங்கிரஸுக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்கிற நிலை ஏற்பட்டது. இதையடுத்து, காங்கிரஸின் டெல்லி தலைமைப்பீடம் தலையிட்டு பேசியதன் அடிப்படையில் தி.மு.க அதிகதொகுதிகள் ஒதுக்க முன்வந்தது.
ஒற்றை இலக்கத்தை காங்கிரஸ் பெற விரும்பவில்லை. ஆகவே இரட்டை இலக்கமாக வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைக்க, தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், காங்கிரஸின் தமிழக தேர்தல் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் முகுல் வாஸ்னிக், வேணுகோபால், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கே.ஆர். ராமசாமி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்னர், தி.மு.க தலைமையகமான அறிவாலயம் வந்த அவர்கள் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தானது. அறிவாலயத்தில், செய்தியாளர்கள் முன்னிலையில் ஸ்டாலின், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட தலைவர்கள் இதை அறிவித்தனர்.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago