Ilango Bharathy / 2022 பெப்ரவரி 07 , பி.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்றுப் பரவலானது அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்நாட்டில் தற்போது அங்குக் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருவதால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சூழலில் சீனாவின் தெற்கு குவாங்சி பிராந்தியத்தில் உள்ள பைஸ் நகரில் தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் நகரத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். சில குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டும் வெளியே வரக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பைஸ் நகரில் கடந்த 3 நாட்களில் மட்டும் 70க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
19 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago