2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

​ நச்சு அல்கஹோலை உள்ளெடுத்ததில் குறைந்தது 99 பேர் இறந்தனர்

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட இந்தியாவில் நச்சு அல்கஹோலை உள்ளெடுத்ததில் குறைந்தது 99 பேர் இறந்துள்ளதுடன் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்றுத்  தெரிவித்துள்ளனர். இதையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கெதிராக நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரேதேச மாநிலத்திலும் உத்தரகாண்ட் மாநிலத்திலும் ஏற்பட்ட குறித்த இறப்புகள் குறித்த தகவல்கள் கடந்த மூன்று நாட்களாக கசிந்த நிலையில், கள்ளச்சாரயத்துடன் மெதனோல் கலக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கள்ளச்சாராயத்தை உள்ளெடுத்த பின்னர் தலைவலி ஏற்படுவதாகத் தெரிவித்த பாதிக்கப்பட்ட பலரே வலியால் துடிக்கையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிராமப்புற இந்தியாவில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மலிவான சாராயம் சாதாரணமென்றபோதும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் அடிக்கடி மெதனோலைக் கலக்கின்றனர். அல்கஹோலின் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மெதனோலானது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களின் உற்பத்தியின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்பொருட்டு சில வேளைகளில் உறையாமலிருப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

அதிகளவில் மெதனோல் உள்ளெடுக்கப்பட்டால், கண் பார்வையற்றுப் போகும் என்பதுடன், ஈரல் பாதிகப்படுவதுடன் மரணம் நிகழும்.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஒரு மாநிலத்தில், நச்சு அல்கஹோலை உள்ளெடுத்தமை காரணமாக 59 பேர் இறந்ததாக பொலிஸ் பேச்சாளர் ஷைலேந்திர குமார் ஷர்மா தெரிவித்துள்ளார். அயல் மாவட்டமொன்றில் ஒன்பது பேர் இறந்ததாகத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர், கள்ளச்சாரயம் காய்ச்சியவர்கள் என்ற சந்தேகத்தில் 66 பேர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சாராயத்தின் மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனையொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதேவேளை, அயல் மாநிலமான உத்தரகாண்டில் குறைந்தது 31 பேர் இறந்ததாகவும் சாராயத்தை விநியோகித்த சந்தேகத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்ட் முழுவதும் நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X