2026 மே 18, திங்கட்கிழமை

dd

நடுவானில் மோதிய இரு விமானங்கள் (வீடியோ)

Lenin Raj   / 2026 மே 18 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் இடாஹோ (Idaho) மாகாணத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின் போது, இரண்டு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளம் (Mountain Home Air Force Base) சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவுகளில் (Gunfighter Skies) விமானக் கண்காட்சியின் போது, அங்கு கூடியிருந்த ஏராளமான பொதுமக்களுக்கு முன்னிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில், இரண்டு போர் விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதும், உடனடியாக அதிலிருந்த நான்கு பேரும் பாராசூட்டுகள் மூலம் (வான்குடை) பாதுகாப்பாக வெளியேறியதும் தெரிகிறது.

"இந்த விபத்தில் சிக்கிய விமானப் பணியாளர்கள் அனைவரும் சீரான உடல்நிலையுடன் உள்ளனர்," என்று ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த மோதலால் ஏற்பட்ட தீ விபத்தும் பாதுகாப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக விமானப்படைத் தளம் உறுதி செய்துள்ளது.

விபத்து நடந்ததைத் தொடர்ந்து அந்த விமானப்படைத் தளம் தற்காலிகமாக மூடப்பட்டது. எனினும், அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் வெளியேறுவதற்காக தற்போது அது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X