2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நடுக்கடலில் மூழ்கிய போர் கப்பல்: 31 பேர் மாயம்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தாய்லாந்து இராணுவத்திற்கு சொந்தமான போர்க்கப்பலொன்று நேற்று முன்தினம் (18) சுமார்  106 இராணுவ வீரர்களோடு தாய்லாந்து வளைகுடா பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது.

இதன்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட புயல் காற்றினால் குறித்த கப்பலானது நடுக்கடலில் மூழ்கத்தொடங்கியுள்ளது.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த மீட்பு படையினர் அக்கப்பலில் இருந்த  75 பேரை மீட்டுள்ளனர்.

இந்நிலையில்  31 வீரர்கள் மாயமாகியுள்ளனர் எனவும், அவர்களைத்  தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .