2022 ஜூலை 04, திங்கட்கிழமை

நோபல் பரிசை விற்ற பத்திரிக்கையாளர்

Ilango Bharathy   / 2022 ஜூன் 23 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்  ரஷ்யாவைச்  சேர்ந்த  பிரபல பத்திரிகையாளரான ‘டிமிட்ரி முரடோவ்‘(Dmitry Muratov).

இவர்  ஏற்கனவே தனக்கு பரிசுத்  தொகையாகக்  கிடைத்த 5 லட்சம் டொலர்களை யுனிசெப் அமைப்புக்கு வழங்குவாக அறிவித்து இருந்தார்.
 
இந்நிலையில் உக்ரேன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரினால்  பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவும் வகையில்  அவர் தனது நோபல் பரிசளிப்பு விழாவின் போது வழங்கப்பட்ட  தங்க பதக்கத்தை விற்க முடிவு செய்தார்.
 
அந்தவகையில் ஹெரிடேஜ் எனும் நிறுவனத்தால் நியூயோர்க்கில் நடந்து முடிந்த ஏலத்தில் குறித்த தங்கப் பதக்கம் 103 மில்லியன் டொலர்கள்   ஏலம்  போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 இதனையடுத்து குறித்த பணம் முழுவதையும் உக்ரேனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு  டிமிட்ரி முராடோவ் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .