Editorial / 2019 ஜனவரி 25 , மு.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் இவ்வாண்டு மே மாதத்தில் இடம்பெறவுள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, பின்னடைவைச் சந்திக்குமென, கருத்துக்கணிப்பொன்று எதிர்வுகூறியுள்ளது. இதனால், தனிப்பெரும்பான்மையை அக்கட்சி பெற முடியாத நிலை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா டுடே, கார்வி இன்சைட்ஸ் மூட்ஸ் ஆகியன நடத்திய கருத்துக்கணிப்பில், உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.கவுக்கு இழப்பு ஏற்படுமென்றே எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இறுதியாக, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 282 ஆசனங்களை பா.ஜ.க வென்றதோடு, அது தலைமையிலான கூட்டணியான தேசிய ஜனநாயக முன்னணி, 336 ஆசனங்களை வென்றிருந்தது. இந்த வெற்றியில், உத்தரப் பிரதேசத்தின் 80 ஆசனங்களில் 73 ஆசனங்களை அக்கட்சி கைப்பற்றியமை முக்கியமானது.
இந்நிலையில், அடுத்த பொதுத் தேர்தலில், அம்மாநிலத்தில் வெறுமனே 5 ஆசனங்களைப் பெறக்கூடிய நிலைமை, பா.ஜ.கவுக்கு ஏற்படக்கூடுமென எதிர்வுகூறப்படுகிறது.
அவ்வாறு நடப்பதற்கு, காங்கிரஸ், சமஜ்வாதி கட்சி, பஹுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரிய லோக் தல் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறான ஒற்றுமையை ஏற்படுத்தினால், பா.ஜ.கவின் தனிப்பெரும்பான்மை இல்லாது போகக்கூடும். ஆனாலும், அவ்வாறான நிலை ஏற்பட்டாலும், தேசிய ஜனநாயக முன்னணி, பெரும்பான்மையைப் பெறக்கூடுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்க வேண்டிய நிலை, பிரதமர் மோடிக்கு ஏற்பட்டால், அது அவருக்குப் பாதிப்பாகவே அமையும்.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025