Ilango Bharathy / 2022 ஜனவரி 07 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது பிரான்ஸில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.
இந்நிலையில் பிரான்ஸின் ஜனாதிபதியான இமானுவேல் மெக்ரோன் அண்மையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது ”கொரோனாத் தடுப்பூசியைச் செலுத்தி கொள்ளாத நபர்களை நாங்கள் சிறையில் அடைக்க போவதில்லை. இருப்பினும் அவர்களை இழிவுபடுத்த போகிறேன். அதோடு மட்டுமின்றி வருகின்ற 15 ஆம் திகதியிலிருந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உணவகங்கள் உட்பட எந்தவித பொது இடங்களுக்கும் செல்ல முடியாது ” என்றார்.
9 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago