Freelancer / 2023 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியதாக டிரம்ப் மற்றும் 18 பேர் மீது ஜார்ஜியா நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது. அவருக்கு 25-ந்திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தேர்தல் மோசடி வழக்கு தொடர்பாக ஜார்ஜியா நீதிமன்றத்தில் வருகிற 24-ந்திகதி டிரம்ப் சரண் அடைகிறார். இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் கூறும்போது, உங்களால் நம்ப முடிகிறதா? கைது செய்யப்படுவதற்காக நான் வியாழன் அன்று ஜார்ஜியாவின் அட்லாண்டாவுக்கு செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜராகுவதையடுத்து ஜார்ஜியாவில் பலத்த பாதுகாப்பு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது, அரசின் ரகசிய ஆவணங்களை வீட்டில் பதுக்கியது உள்ளிட்ட வழக்கு விசாரணை டிரம்புக்கு எதிராக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2 minute ago
7 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
7 minute ago
14 minute ago