2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நூற்றுக்கணக்கான டொல்பின்கள் உயிரிழப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 18 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேசிலில், மழைக்காடுகளின் வழியாக ஓடும் அமேசான் நதியின் கிளை நதிகள் வறண்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வரலாறு காணாத வறட்சி காரணமாக, அமேசானின் கிளை நதிகள் வறண்டுள்ளன.

இதன் காரணமாக, அந்த நதிகளின் வழியாக தொலை தூர கிராமங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதனால், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வது பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், நூற்றுக்கணக்கான டொல்பின்களும் இறந்துவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் ஏராளமான படகுகள் தரைத்தட்டி கிடக்கின்றன. இது தொடர்பான ட்ரோன் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X