Editorial / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவில், தேர்தல் வன்முறையில் 39 பேர் கொல்லப்பட்டதாக சிவில் சமூகக் குழுக்கள் நேற்றுத் தெரிவித்துள்ளன. இராணுவ ஆட்சி 1999ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர் இடம்பெற்ற கடும் போட்டி வாய்ந்த தேர்தலென எதிர்வுகூறப்படும் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலின் முடிவுகளுக்காக நைஜீரியா காத்துள்ளபோதே மேற்குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பொலிஸார் இன்னும் தகவல்களை சேகரிப்பதாகத் தெரிவித்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அப்துல்மஜிட் அலி, உயிரிழந்தோரின் எண்ணிக்கையை வெளிப்படுத்தவில்லை. எவ்வாறெனினும், தெற்கு மாநிலங்களான றிவர்ஸ், அக்வா இபோமில் வன்முறைகள் மோசமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கொலை, வாக்குப் பெட்டிகளைத் திருடியமை, வாக்கு மோசடி உள்ளிட்ட தேர்தல் தொடர்பான குற்றங்களில் நாடாளவிய ரீதியில் 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நைஜீரியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லாகோஸைத் தளமாகக் கொண்ட எஸ்.பி.எம் புலனாய்வு அமைப்பின் தரவை மேற்கோள்காட்டியே 70க்கு மேற்பட்ட சிவில் சமூகக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமையமொன்று குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் இவ்வாரயிறுதியில் வெளிவரும்போது மேலும் வன்முறைகள் வெடிக்கலாமென அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
முன்னாள் இராணுவத் தலைவரான ஜனாதிபதி முஹம்மது புஹாரி, மோசடிக்கெதிரான தளத்தில் தனது இரண்டாவது பதவிக்காலத்தை வெல்ல எதிர்பார்த்துள்ள நிலையில், தனியாரின் வகிபாகத்தை விரிவுபடுத்தவுள்ளதாக உறுதியளித்துள்ள வர்த்தகரும் முன்னாள் உப ஜனாதிபதியான அதிகூ அபூபக்கரை எதிர்கொள்கிறார்.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago