Editorial / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி, தனது இரண்டாவது பதவிக்காலத்தை வென்றுள்ளதாக, அந்நாட்டின் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹ்மூட் யகுபு, நேற்று (27) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி புஹாரி, 56 சதவீதமான வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரது பிரதான போட்டியாளரான வர்த்தகரும் முன்னாள் உப ஜனாதிபதியான மக்கள் ஜனநாயக் கட்சியின் அதிகூ அபுபக்கர் 41 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
எவ்வாறெனினும், ஜனாதிபது புஹாரி வென்றதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், முடிவை நிராகரித்த அதிகூ அபுபக்கர், நீதிமன்றத்தில் இதை சவாலுக்குட்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நைஜீரியத் தலைநகர் அபுஜாவிலுள்ள, தனது அனைத்து முன்னணிக் காங்கிரஸ் கட்சியின் பிரசாரத் தலைமையகத்தில் ஆதரவாளர்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி புஹாரி, “புதிய நிர்வாகமானது, பாதுகாப்பு, பொருளாதாரத்தை மீளக்கட்டமைத்தல், மோசடிக்கெதிராக போராடுதலில் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி புஹாரி, 15.2 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், அதிகூ அபுபக்கர் 11.3 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருந்தார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், 44 சதவீத வாக்களிப்புடன் ஒப்பிடும்போது இம்முறை 35.6 சதவீதமான வாக்களிப்பே காணப்பட்டதாக தேர்தல் ஆணைகுழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முறைப்பாடுகளை கையளிக்கும் முன்னர், இவ்வாரயிறுதியில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படும் உத்தியோகபூர்வ முடிவுகளுக்காக காத்திருக்கிருமாறு, மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரச் சமூகம், ஆபிரிக்க ஒன்றியம், ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் அனைத்துக் கட்சியினரையும் கோரியுள்ளனர்
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago