2025 நவம்பர் 09, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வி

Freelancer   / 2025 நவம்பர் 09 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்தான்புல்லில் நடந்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத கும்பலை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதில் 206 பேர் பலியாகினர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 வீரர்கள் பலியாகினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

எனினும் கட்டார், துருக்கி நாடுகள் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கின. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் சமீபத்திய சுற்று உடன்பாடு இல்லாமல் முறிந்துள்ளது. இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான அவநம்பிக்கையை ஆழமாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X