2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பங்களாதேஷ் விமானத்தை கடத்தியவரென்பவர் சுடப்பட்டார்

Editorial   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

துப்பாகியொன்றை காண்பித்து, விமானத்தை தகர்க்கப் போவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, பிமான் பங்களாதேஷ் எயார்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் அறைக்குள் நுழைய முயன்ற பயணியொருவரை, பங்களாதேஷ் கொமாண்டோக்கள் நேற்று சுட்டதாக, குறித்த விமான, விமான அதிகாரசை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனது மனைவியுடன் தனிப்பட்ட பிரச்சினையொன்று இருப்பதாகத் தெரிவித்த குறித்த பயணி, பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவுடன் பேச விரும்புவதாக விமானியிடம் கூறியுள்ளார். பின்னர், சிட்டகொங் ஷா அமனட் சர்வதேச விமான நிலையத்தில், விமானத்துக்குள் கமாண்டோக்கள் நுழைந்த பின்னர் ஏற்பட்ட காயத்தால் பின்னர் இறந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து, சிட்டகொங் வழியாக டுபாய் செல்லவிருந்த விமானத்திலேயே, விமானத்தை தகர்க்கப் போவதாக குறித்த பயணி அச்சுறுத்தலை விடுத்த நிலையில், விமானிகள் அவசர தரையிறக்கத்தை சிட்டகொங்கில் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த பயணி விளையாட்டுத் துப்பாக்கியொன்றைக் கொண்டிருந்ததாகவும் எந்ந்தவித வெடிபொருட்களையும் கொண்டிருக்கவில்லை என பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X