Editorial / 2019 ஏப்ரல் 18 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசிலுள்ள கிவு நதியில் படகொன்று கவிழ்ந்தையடுத்து ஏறத்தாழ 150 பேரைக் காணவில்லை என கொங்கோ ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி பீலிக்ஸ் ஷிஷெடி நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
கிவு நதியில் கடந்த திங்கட்கிழமை படகு கவிழ்ந்ததால் தான் மிகவும் கவலையடைந்துள்ளதாக தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ள பீலிக்ஸ் ஷிஷெடி, 150 பேரைக் காணவில்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அருகிலுள்ள வட கிவு மாகாணத்திலிருந்து புறப்பட்ட படகானது கலெஹெ பிராந்தியத்துக்கு அருகில் நதியில் கவிழ்ந்ததாக தென் கிவு மாகாணத்திலுள்ள உள்ளூர் செயற்பாட்டளரொருவரான டெல்பின் எம்பிரிம்பி தெரிவித்துள்ளார்.
இதுதவிர, மூன்று சடங்கள் மீட்கப்பட்டதாகவும், 33 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் இன்னொரு 150 பேரைக் காணவில்லை என்று டெல்பின் எம்பிரிம்பி மேலும் கூறியுள்ளார்
12 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago