Freelancer / 2026 ஜனவரி 11 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டது போல ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, அதற்கான அவசியம் இல்லை என டொனால்ட் ட்ரம்ப் பதில் அளித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு போதைப் பொருள்களை தொடர்ந்து கடத்துவதாக குற்றம்சாட்டி, வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கடந்த வாரம் சனிக்கிழமை அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் அவரது மாளிகையில் இருந்து கைது செய்யப்பட்டார். உலகம் முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், இந்த அதிரடி நடவடிக்கை, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்கா மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.
மதுரோ கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெலன்ஸ்கி, ஒரு சர்வாதிகாரி இப்படித்தான் நடத்தப்பட வேண்டும் என்றால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்காவுக்குத் தெரியும் என கூறி இருந்தார்.
ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராகவும் அமெரிக்கா இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், ஜெலன்ஸ்கியின் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டு டொனால்ட் ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவர், நிகோலஸ் மதுரோவை போல புடினுக்கு எதிராகவும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமா? என்றார்.
இதற்கு மிகவும் இயல்பாக பதில் அளித்த ட்ரம்ப், அது அவசியமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. எங்களுக்கும் அவருக்கும் ஒரு சிறந்த உறவு இருக்கிறது. எப்போதுமே இருக்கிறது என தெரிவித்தார். (a)
9 hours ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Jan 2026