S.Renuka / 2026 மார்ச் 02 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை நிறுத்தி, மேற்காசியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
அணுஆயுத ஒப்பந்தத்திற்கு பிடி கொடுக்காத ஈரான் மீது சனிக்கிழமை (28) அன்று அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் அதியுயர் தலைவர் கமேனி உட்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஈரான் முழுவதும் உள்ள அரசு மற்றும் இராணுவத் தளங்கள்
அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை நிறுத்தி, மேற்காசியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தற்போது நிலவும் பதற்றங்களை உடனடியாகக் குறைக்கவும், வன்முறைகளை நிறுத்தவும், அரசியல் மற்றும் இராஜதந்திர செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். ஐ.நா. சபையின் அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் அடிப்படையில், அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
21 minute ago
54 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
54 minute ago
3 hours ago
3 hours ago