Editorial / 2019 மார்ச் 14 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மெக்ஸிக்கோவில், பஸ்ஸொன்றிலிருந்து கடந்த வாரம் கடத்தப்பட்ட 19 பயணிகளும் அகதிகளென அந்நாட்டு ஜனாதிபதி அன்ட்ரேஸ் மனுவல் லொபெஸ் ஒப்ரேட்டர், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்க – மெக்ஸிக்க எல்லையிலுள்ள வன்முறை மிக்க மாநிலமான டமெளலிபாஸை கடந்த வியாழக்கிழமை குறித்த நபர்கள் கடக்கும்போது, வீதியை மறித்த நான்கு வாகனங்கள், அவர்களை பஸ்ஸை நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தாங்கள் வைத்திருந்த பெயர் பட்டியலிலிருந்த 19 பயணிகளை, பஸ்ஸுக்குள் ஏறிய ஆயுதந்தரித்த நபர்கள் கடத்தியிருந்தனர்.
இந்நிலையில், கடத்தப்பட்டவர்கள் எந்த நாட்டவர் எனத் தெரிவித்திருக்காத ஜனாதிபதி அன்ட்ரேஸ் மனுவல் லொபெஸ் ஒப்ரேட்டர், அவர்கள் அகதிகள் என தன்னால் உறுதிப்படுத்த முடியுமெனக் கூறியுள்ளார்.
குறித்த பஸ்ஸானது, ஐக்கிய அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் மக்கலனுக்கு அங்காலுள்ள எல்லை நகரமான றெய்னோஸாவுக்கு, டம்பிக்கோ துறைமுகத்திலிருந்து சென்றிருந்தது.
இந்நிலையில், 19 பயணிகளே கடத்தப்பட்டதாக அதிகாரிகளிடம் பஸ் ஓட்டுநர் தெரிவித்தபோதும், உண்மையாக கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 அளவுக்கு உயர்வாக இருக்கலாம் என விசாரணைத் தகவல்மூலங்கள் இனம்காட்டியுள்ளன.
இதேவேளை, ராடார் திரையிலிருந்து மறைந்து, பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்குள் கண்டுபிடிக்கப்படாமல் நுழையும் வகையிலான கடத்தலை அவர்களே மேற்கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை இடம்பெறுவதாக ஜனாதிபதி அன்ட்ரேஸ் மனுவல் லொபெஸ் ஒப்ரேட்டர் தெரிவித்துள்ளார்
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago