Editorial / 2019 மார்ச் 06 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தானிய இராணுவ ட்ரோனொன்றை, இந்திய விமானப்படை, நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வட இந்திய மாநிலமான ராஜஸ்தானிலுள்ள, பாகிஸ்தானிய எல்லைக்கருகிலுள்ள பிகனேருக்கயே, வானிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணையால், ட்ரோனை இந்திய சுகோய்-30 தாக்குதல் விமானம் வீழ்த்தியதாக, அடையாளங்காணப்படாத தகவல் மூலங்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் 27ஆம் திகதி ட்ரோனொன்று சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர், கடந்த ஆறு நாட்களுக்குள், இந்தியாவுக்குள் ட்ரோனொன்றை அனுப்ப இரண்டாவது தடவையாக பாகிஸ்தான் முயன்றுள்ளது என பி.டி.ஐஎ செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த சம்பவம் தொடர்பாக, இந்தியாவும் பாகிஸ்தானும் கருத்தெதனையும் தெரிவித்திருக்கவில்லை.
இந்நிலையில், இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட ஜம்மு காஷ்மிரின் புல்வாமா மாவட்டத்தில் இடம்பெற்ற மோதலொன்றில், பாதுகாப்புப் படைகளால் ஆயுததாரிகள் இருவர் கொல்லப்பட்டதாக, இந்தியப் பொலிஸார் நேற்று (05) தெரிவித்துள்ளனர்.
அவனிபோராவின் ட்ரால் பகுதியில் மறைந்திருந்த ஆயுததாரிகளுடன் பாதுகாப்புப் படைகள் தொடர்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே, நேற்று முன்தினம் மாலை குறித்த மோதல் ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமது கடற்பகுதிக்குள் இந்திய நீர்மூழ்கிக்கப்பலொன்று நுழைவதை பாகிஸ்தான் தடுத்ததாக, அந்நாட்டு கடற்படை நேற்று (05) தெரிவித்துள்ளது
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago