Editorial / 2023 ஜூலை 31 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் பஜுர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கட்சி மாநாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 40 பேர் பலி, 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) என்ற கட்சி சார்பில் கார் தாலுகாவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் அந்த காட்சியை சார்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல். மாநாடு நடைபெற்ற பகுதிக்குள் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. தற்கொலை படை மூலம் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. சம்பவ இடத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல். குண்டு வெடிப்பில் மோசமாக காயமடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலம் பெஷாவர் கொண்டு சென்று சிகிச்சை வழங்கப்படுவதாக அந்த மாகாணத்தின் அமைச்சர் ஃபிரோஸ் ஷா ஜமால் தெரிவித்துள்ளார்.
51 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
55 minute ago
1 hours ago