Freelancer / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, கற்பனை செய்து பார்க்க முடியாத பதிலடி கொடுக்கப்படும் என, இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை, அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் விரைவில் பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது.
இதனால் பாகிஸ்தான் தன்னை உஷார் படுத்தி வருகிறது. எல்லைகளில் படைகளை குவித்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இந்திய இராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப், “இந்தியா விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும். இதனால் படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் மேலும் கூறுகையில்,
"நாங்கள் எங்கள் படையை வலுப்படுத்தியுள்ளோம். ஏனென்றால் இப்போது உடனடி தாக்குதல் ஒன்று இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில், சில மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ராணுவம் அரசுடன் இந்தியா தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது எனத் தெரிவித்ததுடன், இந்தியாவின் தாக்குதால் உடனடியாக இருக்கும் என்று அவர் நினைப்பதற்கான காரணங்கள் குறித்து தெரிவிக்கவில்லை.
எங்களுடைய இருப்புகளுக்கு நேரடி மிரட்டல் இருந்தால் மட்டும் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படும் மேலும் என்றார்.
32 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago