Freelancer / 2024 ஜூலை 29 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட மோதலில், 36 பேர் கொல்லப்பட்ட நிலையில் 160 பேர் காயமுற்றனர்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஹைபர் பதுன்காவா மாகாணத்தில் போஷேரா கிராமம் உள்ளது. இங்கு தான், கடந்த 5 நாட்களாக மோதல்கள் நடந்து வருகின்றன.
போஷேரா, மலிகேல் (Malikhel), தண்டர் (Dandar) உள்ளிட்ட கிராமங்களில் வசித்துவரும் இஸ்லாமின் ஷியா பிரிவைச் சேர்ந்த பழங்குடியினருக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த பழங்குடியினருக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்துவந்துள்ள நிலையில், நிலத்தகராறு காரணமாக இரு குழுக்களிடையிலும் வன்முறை வெடித்துள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதல்களில் 36 பேர் உயிரிழந்த நிலையில், 162 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலவரத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வர பொலிஸார் தொடர்ந்து முயன்று வரும் போதிலும், இந்த வன்முறையானது மேல் குர்அம் மாவட்டத்தின் மற்றப் பகுதிகளுக்கும் பரவி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S
15 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
57 minute ago
1 hours ago