Ilango Bharathy / 2022 ஏப்ரல் 20 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானின் மேற்குக் காபுல் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் (19) இடம்பெற்ற இத்தாக்குதலில் குறித்த பாடசாலையின் மீது 3 குண்டுகள் வீசப்பட்டன எனவும், இதில் மாணவர்கள் பலர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தாக்குதலுக்கு இதுவரையிலும் எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷியா பிரிவு முஸ்லீம் மக்கள் வசித்து வரும் குறித்த பகுதியில், சன்னி பிரிவு கிளர்ச்சியாளர்களோ அல்லது ஐஎஸ் பயங்கரவாதிகளோ இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago