2026 மே 14, வியாழக்கிழமை

dd

பாறை விழுந்ததில்; 7 பேர் உயிரிழப்பு (வீடியோ இணைப்பு)

Ilango Bharathy   / 2022 ஜனவரி 09 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கேபிடோலியோ பகுதியில் அமைந்துள்ள ஃபர்னாஸ் அருவியைப் பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் மீது பாறையொன்று  விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் ( 08) இடம்பெற்ற இவ்விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  32 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு  ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள நிலையில்  மூன்று மோட்டார் படகுகளில் அப்பகுதியைப் பார்வையிடச்  சென்ற சுற்றுலாப் பயணிகளின்  மீதே அங்கிருந்த  உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறை  ஒன்று உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இவ்விபத்தில் 20 பேர் காணமாற் போயுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .