Editorial / 2019 ஏப்ரல் 11 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நதிகள் இணைப்புக்கு தனி அமைச்சகம் அமையும் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பா.ஜ.க தலைமையில் கூட்டணி அமைந்தால் முதல் வேலையாக நதிகளை இணைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
பா.ஜ.கவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், நதிகளை இணைப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அப்படி நதிகளை இணைத்தால், நாட்டிலுள்ள வறுமை ஒழியும்; விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்றும் கூறினார்.
பா.ஜ.க, அடுத்து ஆட்சிக்கு வருமானால் நிச்சயமாக நதிகள் இணைப்பை முதலில் நிறைவேற்றும் என நம்புவதாகக் கூறினார்.
இதேவேளை, கமலுக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா என்று ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், என்னுடைய ஆதரவை தெரிவித்துவிட்டதாகவும் மீண்டும் கேட்டு தனக்கும் கமலுக்கும் உள்ள நட்பைக் கெடுக்க வேண்டாம்” என்றும் கூறினார்
12 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago