Ilango Bharathy / 2022 ஜனவரி 05 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1000 கிலோ மீற்றர் வரை தொடர்ந்து பயணிக்கக் கூடிய "Vision EQXX" என்ற புதிய அதிநவீன மின்சாரக் காரை ஜேர்மனியின் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற நுகர்வோர் மின்னணு கண்காட்சியில், இக் காரானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1,750 கிலோகிராம் எடை கொண்ட இக்காரானது, சந்தையில் உள்ள மின்சாரக் கார்களிலேய மிகக் குறைந்த எடை கொண்டதாகும்.
மேலும் இதன் பட்டரி செயலிழந்தால் உடனடியாக உதவிடும் வகையில், காரின் மேற்கூரையில் 117 சோலார் செல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு நாளைக்கு 25 கிலோ மீற்றர் தொலைவுக்குக் கூடுதலாக செல்லும் வகையில் சூரிய மின்சக்தி கிடைக்கும்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதன் பட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிலோ மீற்றர் வரை தொடர்ந்து பயணிக்கலாம் எனவும், காரில் உள்ள பெரிய கண்ணாடி திரையில் வீடியோக்களையும், 3-டி முறையிலான பாதையின் ஜிபிஎஸ் காட்சிகளையும் காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
18 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
34 minute ago