2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

’பிரெக்சிற்றுக்கு அதிக காலம் தாருங்கள்’

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான ஒப்பந்தமொன்றைப் பேரம்பேசுவதற்கு, தனக்கு இன்னமும் அதிகால காலம் தருமாறு கோரியுள்ள ஐ.இராச்சியப் பிரதமர் தெரேசா மே, பிரெக்சிற் தொடர்பில் தமது உறுதித் தன்மையைக் கொண்டிருக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரியுள்ளார்.

பிரெக்சிற் தொடர்பில் பிரதமர் மேயும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து பேரம்பேசிய ஒப்பந்தத்துக்கு, ஐ.இராச்சிய நாடாளுமன்றத்தில் படுதோல்வியே கிடைத்திருந்தது. இதைத் தொடர்ந்து, புதிய ஒப்பந்தத்தைப் பேரம்பேச, கடுமையான அழுத்தங்களை, பிரதமர் மே எதிர்கொள்கிறார்.

குறிப்பாக, மார்ச் 29ஆம் திகதியன்று, பிரெக்சிற் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அனைத்துத் தரப்புகளிலிருந்தும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் பிரதமர் மே, நாடாளுமன்றத்தில் நேற்று  (12) உரையாற்றியபோது, "பேச்சுவார்த்தைகள் முக்கியமான தருணத்தில் உள்ளன" எனத் தெரிவித்தார்.

இதன் காரணமாக, நாடாளுமன்றம் கோரும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக, அனைவருமே உறுதியாக இருக்க வேண்டுமெனவும், அதைத் தொடர்ந்தே பிரெக்சிற்றை உரிய நேரத்தில் வழங்க முடியுமெனவும் தெரிவித்தார்.

பேரம்பேசல்கள் ஏற்கெனவே இடம்பெறுகின்ற போதிலும், அவை எந்த நிலையில் உள்ளனவென்பது இன்னமும் தெளிவாகக் காணப்படவில்லை. குறிப்பாக, இரு தரப்புகளுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்திருந்த பிரெக்சிற் அமைச்சர் ஸ்டீவன் பார்க்லே, "இரு தரப்புகளிலும் நல்லெண்ணங்கள் காணப்படுகின்றன" எனத் தெரிவித்திருந்தார். ஆனால் கரத்துத் தெரிவித்திருந்த ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரெக்சிற் பிரதானியான கய் வேர்ஹோஃப்ஸ்டாட், இரு தரப்புகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளில், உறுதியான முன்மொழிவுகள் எவையும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்ததார்.

மறுபக்கமாக, பிரதமரின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரெமி கோர்பின், நேரத்தைக் கடத்தி, இறுதி நேரத்தில், பிரதமரால் சமர்ப்பிக்கப்படும் ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் ஏற்குமெனப் பிரதமர் எதிர்பார்க்கிறாரெனக் குற்றஞ்சாட்டுகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X