2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பிரெக்சிற்றுக்கு எதிர்ப்பு: அமைச்சர்களை மே பதவி நீக்கலாம்

Editorial   / 2019 பெப்ரவரி 22 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே, தனது அதிகாரத்துக்கான புதிய ஆபத்தொன்றை எதிர்கொள்கிறார். பிரதமர் மேயின் அமைச்சர்கள் சிலர், அவரது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது (பிரெக்சிற்) குறித்த உத்திக்கெதிராக வாக்களிப்பது குறித்துக் கருத்திற் கொள்வதாகவும் பின்னர் அவற்றை கைவிடுவது குறித்து சவால் விடுக்கவுள்ளதாகவும் குறித்த விடயம் குறித்து பரிச்சயமானவர்கள் தெரிவித்தாக புளூம்பேர்க் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேறுவதை நோக்கி ஐக்கிய இராச்சியம் சாய்வதை எதிர்க்கும் 15 பேரளவான அமைச்சர்கள், அவர்களது எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளல் அல்லது அவர்களனைவரையும் அரசாங்கத்திலிருந்து நீக்கும் முடிவை பிரதமர் மே எடுப்பதை நோக்கி அவரைத் தள்ளியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேறுவதை தடுக்கும் எதிர்க்கட்சியின் நடவடிக்கையொன்றுக்கு, அமைச்சர்கள் ஆதரவளிக்கவிரும்புவதாக, தமது பெயரை வெளிப்படுத்த வேண்டாமென வினவிய மூவர் தெரிவித்துள்ளனர்.

வழமையாக, அரசாங்கத்துக்கெதிராக வாக்களிக்க விரும்பும் அமைச்சர்கள், கட்சியிலிருந்து விலகுவார்கள் என்றபோதும், தங்களது பதவிகளில் இருந்தாறே, அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்வரும் புதன்கிழமை வாக்களிப்பது குறித்து சிலர் கருத்திற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தண்டனையாக இவர்களை, அவர்களது அமைச்சரவைப் பொறுப்பிலிருந்து நீக்குவதா என்று பிரதமர் மேயே தீர்மானிக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு ஒப்பந்தமொன்று இல்லாவிட்டால், அதைத் தாமதப்படுத்தும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் யுவெட்டே கூப்பர், டொரி ஒலிவர் லெட்வின்னால் ஒருங்கிணைக்கப்படும் நகர்வொன்றுக்கு ஆதரவளிக்கவே அமைச்சர்கள் விரும்புகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X