Editorial / 2018 நவம்பர் 23 , மு.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) திகதி குறிக்கப்பட்டுள்ள போதிலும், இறுதி நாள் வரை, பேரம்பேசல்கள் இடம்பெறவுள்ளன.
இது தொடர்பான வரைவு உடன்படிக்கையில், தனது அமைச்சரவையிடம் அங்கிகாரம் பெற்றுள்ள பிரதமர் தெரேசா மே, அவசர விஜயமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள பெல்ஜியத்துக்கு, நேற்று முன்தினம் (21) சென்றிருந்தார். அதன்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், இன்னமும் முழுமையாக இணக்கப்பாடு ஏற்படவில்லை எனத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, தனது நாட்டுக்குத் திரும்பிய பிரதமர் மே, இன்றைய தினம் (23), பெல்ஜியத்துக்குத் திரும்பி, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியமான அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதேபோல், நாளைய தினமும், பேரம்பேசல்கள் தொடருமெனவும், அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள கூட்டத்திலேயே, இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மாநாடு இடம்பெறவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில், குறிப்பாக அமைச்சரவைக்குள், எதிர்ப்புகளை எதிர்கொண்டுவரும் பிரதமர் மே, இறுதி நாள் வரை பேரம்பேசல்களில் இடம்பெறவுள்ளமை, பிரெக்சிற் தொடர்பான கேள்விகளை அதிகரித்துள்ளது.
17 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
19 minute ago
1 hours ago