Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

கல்வி, குழந்தை வளர்ப்புக்கான உயர் செலவால் அண்மைய ஆண்டுகளில் தீவிரமாகியிருந்த சீனாவின் திருமண, பிறப்பு வீதங்களின் வீழ்ச்சிக்கு கொரோனா வைரஸும் பங்களித்ததாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
திருமணம் செய்து கொள்ளும் திட்டங்களையோ அல்லது குழந்தைகள் பெற்றுக் கொள்வதையோ பல பெண்கள் தொடர்ந்தும் தாமதப்படுத்துவதாக குறித்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நகர்ப்புற பகுதிகளுக்கு இளைஞர்கள் நகருவதாகவும், கல்வியில் அதிக நேரம் செலவளிப்பதும், அதிக அழுத்தமாக பணிச்சூழலும் இதற்கு காரணமாய் அமைவதாக ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.
கடந்தாண்டு பிறந்த 10.6 மில்லியன் குழந்தைகளை விட இவ்வாண்டு 10 மில்லியனுக்கு குறைவான பிள்ளைகளே பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2020ஆம் ஆண்டை விட குறைவாகும்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago